ஐடி அலுவலக சம்பவங்களை மையமாக வைத்து உருவான நகைச்சுவை வெப் தொடர், 'வேற மாறி ஆபீஸ். ஆஹா தமிழ் தளத்தில் வெளியான இந்த தொடர், வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் வேற மாறி ஆபீஸ் 2' என்ற பெயரில் இப்போது உருவாகிறது.
முதல் சீசனின் தொடர்ச்சியாக, நிஷா (ஜனனி) தலைமையில் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்குகிறார்கள், அந்நிறுவனம் சந்திக்கும் சவால்கள், பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைகள் போன்றவற்றை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்வது இத்தொடரின் கதை.
கனா புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகாந்த் தயாரிக்கும் இத்தொடரை ஐஷ்வினி இயக்குகிறார். இதில் ஆர்ஜே விஜய், சவுந்தர்யா நஞ்சுண்டன், மாறன், ஜனனி அசோக்குமார், ஜெயசீலன், ரவீனா உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யா ஒளிப்பதிவு செய்யும் இத்தொடருக்கு ராகவ் இசையமைக்கிறார்.
WRITE A COMMENT