இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்திக் ஆர்யனின் ‘சந்து சாம்பியன்’ இந்திப் படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம். சுதீர் பாபுவின் ‘ஹரோம் ஹரா’ (Harom Hara) தெலுங்கு படம் நாளை வெளியாகிறது.
குஞ்சாக்கோ போபனின் ‘கிர்ர்ர்’ (Grrr) மற்றும் ராய் லக்ஷமியின் ‘டிஎன்ஏ’ மலையாளப் படத்தையும் திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை காணலாம். ஹாலிவுட் அனிமேஷன் படமான ‘இன்சைட் அவுட் 2’ (Inside Out 2) திரைப்படம் நாளை வெளியிடப்பட உள்ளது.
ஓடிடி ரிலீஸ்: ஆமீர்கானின் மகன் ஜூனைத் கான் நடிகராக அறிமுகமாகும் ‘மஹாராஜ்’ இந்திப் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் நாளை வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘குரங்கு பெடல்’ ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது. விஷ்வாக் சென், அஞ்சலி நடித்துள்ள ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’ தெலுங்கு படம் நெட்ஃப்ளிக்ஸில் தற்போது காணக்கிடைக்கிறது. சுனில் நடித்துள்ள ‘பாரிஜாத பர்வம்’ ஆஹா ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
வெப்சீரிஸ்: ஆண்டனி ஸ்டாரின் ‘தி பாய்ஸ்’ வெப்சீரிஸின் 4ஆவது சீசன் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.
WRITE A COMMENT