பங்கஜ் திரிபாதியின் ‘மிர்சாபூர்’ 3-வது சீசன் ஜூலை 5-ல் ரிலீஸ்!


பங்கஜ் திரிபாதியின் ‘மிர்சாபூர்’ 3-வது சீசன் ஜூலை 5-ல் ரிலீஸ்!

மும்பை: பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘மிர்சாபூர்’ பாலிவுட் தொடரின் 3ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.

கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப்சீரிஸ் ‘மிர்சாபூர்’. இதன் முதல் சீசனில் 9 எபிசோடுகள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் இரண்டாவது சீசன் கடந்த 2020-ம் ஆண்டு 10 எபிசோடுகளாக வெளியானது. இந்நிலையில் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது ‘மிர்சாபூர்’ 3ஆவது சீசன் வரும் ஜூல 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர் வீடியோ:

FOLLOW US

WRITE A COMMENT

x