டோவினோ தாமஸின் ‘நடிகர்’ ஜூன் 27-ல் ஓடிடியில் ரிலீஸ்


டோவினோ தாமஸின் ‘நடிகர்’ ஜூன் 27-ல் ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘நடிகர்’ மலையாளப் படம் ஜூன் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லால் ஜூனியர் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான ‘நடிகர்’ திரைப்படம் கடந்த மே மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சவுபின் ஷாஹிர், இந்திரன்ஸ், திவ்யா பிள்ளை, பாலு வர்கீஸ், ஷைன் டாம் சாக்கோ, அனூப் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த்துள்ளனர். இப்படத்துக்கு யாக்சன் கேரி மற்றும் நேஹா நாயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

ஒரு நடிகர் திரையுலக வாழ்வில் நிகழும் ஏற்ற இறக்கங்களை களமாக கொண்ட இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ரூ.30 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.10 கோடி வசூலைக் கூட தாண்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x