சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘குரங்கு பெடல்’ திரைப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ படங்களை இயக்கிய கமலக்கண்ணன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘குரங்கு பெடல்’. ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிறிய பட்ஜெட்டில் உருவான படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வரும் ஜூன் 14-ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT