‘அஞ்சாமை’ முதல் ‘மைதான்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘அஞ்சாமை’ முதல் ‘மைதான்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: விதார்த் நடித்துள்ள ‘அஞ்சாமை’, மோகன் நடித்துள்ள ‘ஹரா’, சத்யராஜ், வசந்த் ரவியின் ‘வெப்பன்’ ஆகிய தமிழ் படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின்றன. காஜல் அகர்வாலின் ‘சத்யபாமா’, ஷர்வானந்த்தின் ‘மனமே’ ஆகிய தெலுங்கு படங்களையும் நாளை காண முடியும்.

ஷேன் நிகாமின் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ மலையாளப் படம் நாளை வெளியிடப்பட உள்ளது. வில் ஸ்மித்தின் ‘பேட் பாய்ஸ்: ரைட் ஆர் டை’ (Bad Boys: Ride or Die) ஹாலிவுட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: விக்ராந்த் மாஸ்ஸியின் ‘ப்ளாக் அவுட்’ (Blackout) இந்திப் படம் ஜியோ சினிமா ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அஜய் தேவ்கனின் ‘மைதான்’ இந்திப் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்க முடியும். அக்சய்குமார், டைகர் ஷெராஃப்பின் ‘படே மியான் சோடே மியான்’ (Bade Miyan Chote Miyan) பாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்டு தற்போது காணக்கிடைக்கிறது.

பிரனவ் மோகன்லாலின் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham) மலையாளப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெள்ளிகிழமை வெளியாகிறது.

இணைய தொடர்: ஹாலிவுட் தொடரான ‘தி அகோலிட்’ (The Acolyte) இணையத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x