‘கருடன்’ முதல் ‘வீர் சாவர்க்கர்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘கருடன்’ முதல் ‘வீர் சாவர்க்கர்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: சூரி நடித்துள்ள ‘கருடன்’, விஜய் கனிஷ்காவின் ‘ஹிட் லிஸ்ட்’, குழந்தைகள் படமான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’, நாசரின் ‘தி அகாலி’ ஆகிய தமிழ்ப் படங்கள் வெள்ளிக்கிழமையான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. விஸ்வக் சென் நடித்துள்ள ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ (Gangs of Godavari) தெலுங்கு படத்தை திரையரங்குகளில் காணலாம்.

அர்ஜூன் அசோகனின் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் கொச்சி’ (Once Upon a Time in Kochi) மலையாள படம் இன்று வெளியாகியுள்ளது. ராஜ்குமார் ராவ், ஜான்விகபூரின் ‘மிஸ் அன் மிஸஸ் மஹி’ இந்திப் படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டுகொண்டிருக்கிறது. ரென்னி ஹார்லினின் ‘தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்: சாப்டர் 1’ (The Strangers: Chapter 1) ஹாலிவுட் படம் வெளியிடபட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ்: சஞ்சய் கபூரின் ‘ஹவுஸ் ஆஃப் லைஸ்’ (House of Lies) இந்திப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது காணக் கிடைக்கிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ரன்தீப் ஹூடாவின் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ (Swatantrya Veer Savarkar) ஜீ5 ஓடியில் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள ‘ஒரு நொடி’ தமிழ் படம் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஹாரர் ஹாலிவுட் படமான ‘தி ஃபர்ஸ்ட் ஓமன்’ The (First Omen) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ளது.

இணைய தொடர்: இந்தியின் புகழ்பெற்ற காமெடி - ட்ராமா வெப்சீரிஸான ‘பஞ்சாயத்’ தொடரின் 3வது சீசன் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பொன்வண்ணன், வனிதா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘உப்பு புளி காரம்’ தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது. பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் அறிமுக அனிமேஷன் தொடரான ‘புஜ்ஜி அன்ட் பரைவா’ (Bujji and Bhairava) அமேசான் ப்ரைமில் உள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x