இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: ஹிப்ஹாப் ஆதியின் ‘PT சார்’, ராமராஜனின், ‘சாமானியன்’, வெற்றியின் ‘பகலறியான்’ ஆகிய தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. மம்மூட்டியின் ‘டர்போ’, பிஜூமேனனின் ‘தலவன்’ (Thalavan) மலையாளப் படங்கள் தியேட்டர்களில் காணலாம். சன்னி தியோலின் ‘பையா ஜி’ (Bhaiyya Ji) இந்திப் படமும், ‘லவ் மீ’ தெலுங்கு படமும் வெளியாகியுள்ளது.
ஓடிடி ரிலீஸ்: பால் க்ரவுடரின் ‘ப்ளூ ஏஞ்சல்ஸ்’ (The Blue Angels) ஹாலிவுட் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: விஷால் - ஹரி கூட்டணியின் உருவான ‘ரத்னம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. அஜய் தேவ்கனின் ‘மைதான்’ படத்தை அமேசான் ப்ரைமில் ‘ரென்ட்’ முறையில் பார்க்க முடியும். கரீனா கபூர், தபுவின் ‘Crew’ இந்திப் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். ‘பிரசன்னா வதனம்’ (Prasanna Vadanam) தெலுங்கு படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்க முடியும்.
இணைய தொடர்: ஹாலிவுட் வெப்சீரிஸான ‘Jurassic World: Chaos Theory’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது காணக்கிடைக்கிறது.
WRITE A COMMENT