லாஸ் ஏஞ்சல்ஸ்: அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற பிரம்மாண்ட வெப் தொடர், 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்'. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்ததொடர் என்ற பெருமையையும் பெற்றது. பேட்ரிக் மேக்கே, ஜேடி பெய்ன் உருவாக்கிய இந்தத் தொடரில் சவுரன் என்ற வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தொடரின் அடுத்த சீசன் உருவாகியுள்ளது. இதில், சவுரன் மீண்டும் தோன்றுகிறார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த தொடரின் இரண்டாவது சீசன், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஆக.29-ல் வெளியாகிறது.
இரண்டாவது சீசனின் அறிமுக நிகழ்ச்சி, நியூயார்க்கில் சமீபத்தில் நடந்தது. அப்போது சில காட்சிகள் திரையிடப்பட்டன. கலந்துக்கொண்ட பார்வையாளர்கள், மிடில் எர்த் காலத்துக்குத் தாங்கள் பின்னோக்கி கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
WRITE A COMMENT