சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் வரும் 17-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளனர். பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சுவாரஸ்யமில்லாத திரைக்கதை மற்றும் கதைக்கான நோக்கமில்லாமல் படம் தடுமாறுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இப்படம் வரும் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT