விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ மே 10-ல் ஓடிடியில் ரிலீஸ்!


விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ மே 10-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் மே 10-ம் தேதியான வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘ரோமியோ’. இதில் மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்திருந்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரப் னே பனாதி ஜோடி’ இந்திப் படத்தின் சாயலில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. “ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” என விஜய் ஆண்டனியே குரல் கொடுத்தார்.

இந்நிலையில், இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஹா ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஓடிடியில் இந்தப் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x