Published : 01 Mar 2024 06:20 PM
Last Updated : 01 Mar 2024 06:20 PM
சென்னை: டோவினோ தாமஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ (Anweshippin Kandethum) திரைப்படம் மார்ச் 8-ல் ஓடிடியில் வெளியாக உள்ளது.
டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.30 கோடி வசூலை ஈட்டியது.
வினீத் தட்டில், ராகுல் ராஜகோபால், சித்திக், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
டோவினோ தாமஸின் நடிப்பு பாராட்டப்பட்டது. மர்மமான இரண்டு கொலைகளும், அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வரும் மார்ச் 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, மலையாளம், தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பார்க்க முடியும்.
Anweshanathinaayi varunnu Anand and team
— Netflix India South (@Netflix_INSouth) March 1, 2024
Anweshippin Kandethum, coming to Netflix on 8 March in Malayalam, Tamil, Telugu, Kannada and Hindi. #AnweshippinKandethumOnNetflix pic.twitter.com/j80BlUezg4
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT