Published : 30 Sep 2023 05:34 PM
Last Updated : 30 Sep 2023 05:34 PM
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் அக்டோபர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அனுஷ்கா. 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. உடல் பருமன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்பட்டது.
இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அனுஷ்கா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இவர் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர். மகேஷ் பாபு.பி இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.
ரொமான்டிக் - காமெடி ட்ராமாவாக உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக ரூ.20 கோடிக்கு பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.50 கோடி அளவில் வசூலை ஈட்டியது. இந்நிலையில், படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
When a Chef and a comic team up, you know they’re cooking up something hilarious!
— Netflix India South (@Netflix_INSouth) September 30, 2023
Miss Shetty Mr Polishetty is coming to Netflix on October 5th in Telugu, Tamil, Malayalam, Kannada and Hindi! #MissShettyMrPolishettyOnNetflix pic.twitter.com/Cole3cVa1M
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT