Published : 19 Jul 2023 02:42 PM
Last Updated : 19 Jul 2023 02:42 PM
நியூயார்க்: மார்வெல் நிறுவனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸ் 3’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் படவரிசையில் 32-வது படமாகவும், கார்டியன்ஸ் பட வரிசையின் மூன்றாவது பாகமாகவும் கடந்த மே மாதம் வெளியாகியனது ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3’. ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்துக்குப் பிறகு கடும் நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்ட மார்வெல் நிறுவனத்துக்கு இப்படம் ஒரு கம்பேக் படமாக அமைந்தது. உலகம் முழுவதும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தில் ஓடிடி வெளியீட்டுத் தேதியை மார்வெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸ் 3’ படம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகிறது.
ஜேம்ஸ் கன் இயக்கிய இப்படத்தில் க்றிஸ் ப்ராட், டேவ் பாட்டிஸ்டா, ப்ராட்லி கூப்பர், வின் டீசல், ஷான் கன், ஜோ சால்டானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Crank up the volume, the Guardians are coming home #GotGVol3
— Marvel Studios (@MarvelStudios) July 17, 2023
Guardians of the Galaxy Vol. 3 is streaming on @disneyplus August 2. pic.twitter.com/blbPreJrTi
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT