Published : 07 Apr 2015 11:49 AM
Last Updated : 07 Apr 2015 11:49 AM

பைக் மாணவர்களுக்கு கவனம் தேவை: தெய்வநாயகி

கட்டுரை:>இந்தப் 'பாவம்' செய்யாதவர்கள் கை உயர்த்துக!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் தெய்வநாயகி கருத்து:

இத்துடன் இன்னொரு விஷயத்தையும் பெற்றோர்கள் உணர வேண்டும். ஓட்டுனரின் மூன்றாவது கண் எனப்படும் ரிவ்யூ மிரர்-ஐ பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் அகற்றிவிட்டு செல்கின்றனர். பின்னால் வரும் வாகனத்தின் வேகம் மற்றும் தூரம் கணக்கிட உதவும் இதனை அகற்றி தன் இன்னுயிரை இழக்கின்றனர்.

பொறுப்புள்ள பெற்றோர்கள் லட்சம் லட்சமாக செலவு செய்து வாகனம் வாங்கித் தருவதை பெருமையாக கருதுவதை விட்டு, வண்டியில் கண்ணாடி அகற்றாமல் இருக்கிறதா? ஹெல்மெட் அணிகிறார்களா? என்பதனையும் கவனிக்க வேண்டும்.

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கும் பாடப்பகுதிகள் சிலபஸ் உள்ளன. அது முறையாக சொல்லித் தரும் பள்ளிகளில் பயில வைக்க வேண்டும். முறையாக பயிலவில்லை என்றால் எந்த வித்தையும் கை கொடுக்காது.

பயிற்சி மூன்று நிலை:- முதலாவது வாகனத்தை எப்படி இயக்குவது? இரண்டாவது போக்குவரத்து விதிகள் என்ன? மற்றும் எப்படி கடைபிடிப்பது? மூன்றாவது வாகனம் மற்றும் ஓட்டுனரின் குறைபாட்டினால் விதிமீறல்களிடம் இருந்து எப்படி தப்புவது? இவை தான் முறையான பயிற்சி.

இவற்றில் முதலாவது மட்டும் தெரிந்தால் போதும் என்று ஓட்டுபவர்களே அதிகம். கரணம் தப்பினால் மரணம் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x