Published : 25 Aug 2015 10:57 AM
Last Updated : 25 Aug 2015 10:57 AM
இந்தத் தலைமுறையினர் மண் மணம் என்பதையே என்னவென்று தெரியாமல் வளர்ந்துவிட்டார்களே என்ற வருத்தம் ஏற்பட்டது, ‘மனுசங்க’ கட்டுரை படித்தபோது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத் தில் பிறந்து வளர்ந்தவர்கள், உத்தி யம்மா, தூங்காநாயக்கர் போன்றுதான் விவசாய வேலைகளையும் தங்கள் வீட்டு வேலைகளையும் செய்து வந்தனர். கூரை வீடாக இருந்தாலும் சாணி போட்டு மெழுகி, சுத்தமாகவும் அதே நேரத்தில், ஆரோக்கியத்துக்கு உகந்த நிலையிலும் வைத்திருந்தார்கள்.
வீட்டின் பக்கத்தில்தான் தொழுவம் இருக்கும். அருகில் மாட்டுச் சாணத்தின் வாசம் இருக்குமேயன்றி, சுகாதாரக் குறைவு இருக்காது. வீட்டினுள் பெண்களும் குழந்தைகளும், வெளியில் ஆண்களும் படுத்திருந்த காலம் அது. அவர் தெரிவித்துள்ளதைப் போன்று அடைமழை என்ற வார்த்தையை தற்போது கேட்க முடியாத அளவுக்குப் பருவநிலை மாறிவிட்டது. அந்த அடைமழையிலும் உள்ள சுகானுபவங்களை மிகவும் விரிவாக அவருக்கே உரிய நடையில் விவரித்திருப்பது, மண் மணமும் மழை மணமும் கலந்து நம் நாசிகளில் மென்மையாய் இழையோடிக் கலக்கிறது.
ஜீவன்.பி.கே.,கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT