Published : 08 Sep 2025 07:22 AM
Last Updated : 08 Sep 2025 07:22 AM
இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்திருக்கும் நிலையில், சீனாவுடனான பிணக்குகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அந்நாட்டுடனான நட்புறவைப் புதுப்பிப்பதில் இந்தியா காட்டும் ஆர்வம் கவனம் ஈர்க்கிறது. இதனால் உடனடிப் பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
இந்திய இறக்குமதிப் பொருட்களுக்குப் பரஸ்பர வரியாக 25% வரி விதித்த டிரம்ப், உக்ரைன் போர் பின்னணியில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டிக் கூடுதலாக 25% வரி விதித்தது, இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT