Published : 13 Jun 2018 10:02 AM
Last Updated : 13 Jun 2018 10:02 AM

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்குமா?

பா

கிஸ்தானில் ஜூலை 25-ல் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்நாட்டின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நஸீர்-உல்-முல்க் நியமிக்கப்பட்டிருக் கிறார். அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து இவரை இடைக்காலப் பிரதமராக்கியிருக்கின்றன. இவரது கண்காணிப்பில் தான் பொதுத்தேர்தலை பாகிஸ்தான் எதிர்கொள்ளவிருக் கிறது. பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது பதவிக்காலத்தை முழுமை யாக நிறைவுசெய்தது ஒருமுறைதான். இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகியிருக்கும் பாகிஸ்தானில் நிலையான அரசு அமைய, இடைக்காலப் பிரதமர் வழிவகுப்பாரா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

நஸீர்-உல்-முல்க் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றிருப்பதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிகள் உட்பட அனைத்துத் தரப்புகளிலிருந்தும் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த காலகட்டத்தில், 2012-ல் பிரதமராக இருந்த யூசஃப் கிலானி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டது உட்பட எண்ணற்ற சர்ச்சைக்குரிய அரசியல் விவகாரங்களை எதிர்கொண்டிருக்கிறார் முல்க். 2007-ல், அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் அதிகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் விதமாக தடை ஆணை ஒன்றை ஏழு நீதிபதிகள் கொண்ட குழு பிறப்பித்தது. அந்தக் குழுவில் முல்க்கும் ஒருவர்.

முல்க் மற்றும் அவரது இடைக்காலக் குழுவுக்கு அடுத்த இரண்டு மாதங்களும் நெருக்கடி மிகுந்த காலகட்டம்தான். முதலாவதாக, பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண் காணிக்கும் சர்வதேச அமைப்பு பாகிஸ்தானைக் கண் காணிப்பில் வைத்திருப்பது. இரண்டாவது, உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்தாலும் அது முதல் பிரச்சினையின் நீட்சியாகவே இருக்கிறது. பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதி களாலும் தீவிரவாதிகளாலும் பல்வேறு இடர்களைச் சந்தித்துவருகிறது. பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் தேர்தல் களத்தில் மற்றவர்களோடு சேர்வதற்கும் அரசியல் மையங்களை வலுவிழக்க வைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தவிரவும், பிரச்சாரத்தின்போது பாதுகாப்பு தருவது என்பதே சவால் நிறைந்ததுதான்.

ஒரு இடைக்காலப் பிரதமராக, பொருளாதாரத்தையும் சரிசெய்ய வேண்டிய கடமை முல்க்குக்கு இருக்கிறது. கடன் நெருக்கடியை ஈடுசெய்வதற்காக சீனாவிடம் 100 முதல் 200 கோடி டாலர் வரை, பாகிஸ்தான் அரசு கடன் கேட்டதாகக் கூறப்படுகிறது. முல்க், தனக்குள்ள பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதுதான் தெற்காசிய நாடு களுக்கும், இதர நாடுகளுக்கும் ஆக்கபூர்வமான சமிக்ஞை யாக அமையும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x