Published : 30 Oct 2024 06:25 AM
Last Updated : 30 Oct 2024 06:25 AM
அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களும் ஊடக நிறுவனங்களும், பொருளாதாரக் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களின் துணையுடன் முடக்கப்படும் போக்கு சர்வதேச அளவில் அதிகரித்துவருவதாக யுனெஸ்கோவும் வேறு சில சர்வதேச அமைப்புகளும் தெரிவித்திருக்கின்றன. சர்வதேச அளவில் ஜனநாயகத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள கடுமையான சவாலாகவே இதைப் பார்க்க வேண்டும்.
‘பத்திரிகையாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் மெளனமாக்குவதற்கும் அச்சுறுத்துவதற்கும் நிதிசார் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள யுனெஸ்கோ அறிக்கை, 2005 முதல் நிதிசார் சட்டங்களின் கீழ் பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 120 வழக்குகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT