Published : 03 Oct 2024 06:27 AM
Last Updated : 03 Oct 2024 06:27 AM
இந்தியாவின் 3,000 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பின்படி, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களில் 91.9% பேர் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் 68.9% பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 14.7%, பட்டியல் பழங்குடியினர் 8.3% என்கிறது இந்தக் கணக்கெடுப்பு. நாட்டின் விளிம்புநிலை மக்களின் அவல நிலைக்குப் புதிய சான்று என்றே இதைக் கருத வேண்டியிருக்கிறது.
2018-2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 443 பேர் கழிவுநீர்த் தொட்டி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துள்ளனர் என மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மக்களவையில் தெரிவித்துள்ளார். கழிவுநீர்த் தொட்டி சுத்தப்படுத்தும் தொழிலாளர்களுக்கான அமைப்பான சஃபாய் கரம்சாரி ஆந்தோலன் அறிக்கை, இதற்கு மாறாக 1,760 பேர் இந்தக் காலகட்டத்தில் உயிரிழந்ததாகக் கூறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT