Published : 23 Sep 2024 06:18 AM
Last Updated : 23 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
ரயில்வே பணியாளர் பற்றாக்குறை முடிவுக்கு வர வேண்டும்

இந்தியாவில் பயணிகள், ரயில்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில், ரயில்வே துறையில் போதுமான அளவுக்குப் பணியாளர்கள் இல்லை என்பது நீண்ட நாள் முறையீடாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதற்குப் பணியாளர்களின் பணிச்சுமையும் பற்றாக்குறையும் முதன்மைக் காரணமாகக் கூறப்படுகின்றன. இந்நிலையில், அண்மையில் ரயில்வே வாரியத்தின் தலைவர் - தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள சதிஷ் குமார், பணியாளர் பற்றாக்குறை குறித்து நிதித் துறை அமைச்சகத்துக்கு எழுதியிருக்கும் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

2021 நிலவரப்படி, இந்தியாவில் சராசரியாக 13,555 ரயில்கள் பயணிகளுக்காகவும் சரக்குகள் எடுத்துச்செல்வதற்காகவும் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர்; 150 கோடி டன் சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மொத்தம் 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ரயில்வேயில், மத்திய மண்டலத்தில் மட்டும் ஏறக்குறைய 50% காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ரயில்களை இயக்குவது, பராமரிப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கிய பயணிகளது பாதுகாப்பு நோக்கிலான துறைகளில் மட்டும் இவ்வளவு பற்றாக்குறை இருப்பது கவலையளிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x