Published : 20 Sep 2024 06:15 AM
Last Updated : 20 Sep 2024 06:15 AM
சிந்து நதிக் கரையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செழித்து வளர்ந்த சிந்துவெளி நாகரிகம், தொல்லியல் ஆய்வின் மூலம் உலகுக்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் ஆகின்றன. இந்திய வரலாற்றின் மீதான பார்வையில் புதிய ஒளியைப் பாய்ச்சிய இந்நிகழ்வைக் கொண்டாடும் இத்தருணத்தில், தொல்லியல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும் உறுதியான சான்றுகளுடன் வரலாற்றை அணுக வேண்டிய தேவையையும் நாம் பேசியாக வேண்டும்.
1920களில் இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் சர் ஜான் மார்ஷல் தலைமையிலான குழு மேற்கொண்ட அகழாய்வில், வெண்கலக் கால ஹரப்பா, மொகஞ்சதாரோ உள்ளிட்ட நகரங்கள் (பொ.ஆ.மு. (கி.மு.) 3500 - 1700) குறித்த தகவல்கள் கிடைத்தன. 1924 செப்டம்பர் 20இல், ‘தி இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்’ இதழில் ஜான் மார்ஷல் எழுதிய ‘A Forgotten Age Revealed’ என்னும் கட்டுரை, சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டதை உலகத்துக்கு அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT