Published : 16 Sep 2024 07:24 AM
Last Updated : 16 Sep 2024 07:24 AM

ப்ரீமியம்
ஃபிரான்ஸ் தேர்தல்: மீறப்பட்ட மக்கள் தீர்ப்பு

ஃபிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் நான்காம் இடத்தைப் பெற்ற கட்சியின் மிஷேல் பார்னியே, அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அந்நாட்டில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தாந்த மோதல்களை மேலும் கூர்மைப்படுத்தும் காரணியாக இந்த நிகழ்வு அமைந்துவிட்டது.

ஜூன் 9 அன்று நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் ஃபிரான்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசியப் பேரணி (National Rally) அதிக இடங்களைப் பெற்றது. மையவாத அரசியலைப் பின்பற்றும் அதிபர் இம்மானுவேல் மக்ரூனின் மறுமலர்ச்சிக் கட்சி (Renaissance) பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. இந்நிலையில், ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு, தீவிர வலதுசாரி அரசியலுக்கு எதிரான, தெளிவான மக்கள் தீர்ப்பைப் பெறுவது அவசியமாகிவிட்டதாகக் கூறி நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்த மக்ரூன் உத்தரவிட்டார். இது தீவிர வலதுசாரிகளின் செல்வாக்கை வலுப்படுத்தவே உதவும் என்று சர்வதேச ஊடகங்கள் எச்சரித்தன. இப்போது அந்த எச்சரிக்கை மெய்யாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x