Published : 06 Aug 2024 06:23 AM
Last Updated : 06 Aug 2024 06:23 AM

ப்ரீமியம்
அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. அரசுக்கும் காவல் துறையினருக்கும் சவால் விடுக்கும் அளவுக்கு, சமூக விரோதிகள் இழைக்கும் இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

தலைநகர் சென்னையில் ஜூலை 5இல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஜூலை 16இல் மதுரையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஜூலை 27இல் சிவகங்கை மாவட்டத்தில் பாஜக கூட்டுறவு அணியின் மாவட்டச் செயலாளர் செல்வகுமார், அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினர் உஷா ராணியின் கணவர் ஜாக்சன், ஜூலை 28இல் கடலூர் நகர அதிமுக வட்டச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x