Published : 05 Aug 2024 06:26 AM
Last Updated : 05 Aug 2024 06:26 AM

ப்ரீமியம்
இஸ்ரேலின் ஆக்ரோஷ அணுகுமுறை: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

காஸா போரின் தீவிரம் இன்னமும் குறையாத நிலையில், ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்துவரும் நிலையில், 2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நிலைமை மேலும் படுமோசமானது.

பதிலடி என்கிற பெயரில் காஸாவில் இதுவரை 40,000 பேரை இஸ்ரேல் கொன்றழித்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் இதுவரை எவ்விதப் பலனையும் அளிக்காத நிலையில், ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x