Published : 25 Jul 2024 08:19 AM
Last Updated : 25 Jul 2024 08:19 AM
பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட் 2024-25), ஜூலை 23இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட், சமகால அரசியல் சூழலை எதிர்கொள்வதற்கான முனைப்பு என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சியை நோக்கிய முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையூட்டுகிறது.
மக்களவைத் தேர்தல் களத்தில் எதிரொலித்த வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் விதத்தில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT