Published : 07 Feb 2018 08:47 AM
Last Updated : 07 Feb 2018 08:47 AM
ரா
ஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர், அல்வார் மக்களவைத் தொகுதிகளுக்கும், மண்டல் கர் சட்ட மன்றத் தொகுதிக் கும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, ஆளுங்கட்சியான பாஜகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தையும் அதிருப்தியையும் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கட்சிக்குள்ளேயே தொண்டர்கள் மத்தியில் வசுந்தரா ராஜே மீது அதிருப்தி எழுந்திருப்பதும் பட்டவர்த்தனமாகி யிருக்கிறது.
1993-ல் ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே காங்கிரஸ் அல்லது பாஜகவை மக்கள் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெறச் செய்ததில்லை. ஆனால் 2014-ல் மோடிக்கு ஆதரவாக நாடு முழுவதும் திரண்ட ஆதரவு ராஜஸ்தானிலும் பலமாக எதிரொலித்தது. 25 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. இந்நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் தோற்காமல் இல்லை. 2015-ல் நடந்த பிஹார் சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி முக்கியமானது. ஆனாலும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய மகா கட்பந்தன் என்ற கூட்டணியால் அது ஏற்பட்டது. 2017-ல் பஞ்சாப் தேர்தலில் பாஜக கூட்டணிக்குக் கிடைத்த தோல்வி, அகாலி தளத்தின் ஆட்சி மீதான அதிருப்தியாகவே பார்க்கப்பட்டது. குஜராத் தைப் போலவே ராஜஸ்தானிலும், போட்டி பாஜக - காங்கிரஸ் இடையேதான் இருக்கப்போகிறது. குஜராத்தில் நூலிழையில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது பாஜகவால். ராஜஸ்தானில் அது முடியாவிட்டால் தேசிய அளவில் பாஜகவுக்கு செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்க இளம் தலைவர் சச்சின் பைலட் முன்னிறுத்தப்பட்டார். வெற்றிக்கு அது முக்கிய காரணம். குஜராத்திலும் காங்கிரஸ் இதையே செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலையும் அமெரிக்க அதிபர் தேர்தலைப் போலவே பாஜக அணுகிவரும் சூழலில் காங்கிரஸும் தனது வியூகங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.
ராஜஸ்தான் இடைத்தேர்தல்களில் தோல்வியைச் சந்தித் திருக்கும் பாஜக, மேற்கு வங்கத்தில் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டுவருகிறது. அம்மாநிலத்தின் உலுபெரியா மக்களவைத் தேர்தலிலும் நவபாரா சட்ட மன்றத் தொகுதியிலும் ஆளும் திரிண மூல் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால், பாஜகதான் இரண்டாம் இடத்துக்கு வந்திருக்கிறது. இடதுசாரி முன்னணி இழந்த ஆதரவைத் திரும்பப் பெறவில்லை. இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவாகிவருகிறது. இந்த ஆண்டில் ராஜஸ்தான் சட்ட மன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி காங்கிரஸுக்கு உற்சாகத்தை அளித்திருக் கிறது. காங்கிரஸ் அந்த உற்சாகத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்பதை இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ராஜஸ்தான் பொதுத்தேர்தல் சொல்லிவிடும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT