Published : 22 Apr 2022 07:08 AM
Last Updated : 22 Apr 2022 07:08 AM
மருந்துகளாலோ அறுவை சிகிச்சைகளாலோ நிவாரணம் பெற்று உயிர் பிழைக்க வேண்டும் என்றுதானே மக்கள் மருத்துவமனைகளை நாடுகிறார்கள்? அப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் தினந்தோறும் மருத்துவமனைகளை நாடிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இல்லையென்பதால், அந்த மக்களை மரணிக்க விடுவதன்றி வேறு வழியற்ற நிலைமையில் தற்போது இலங்கை உள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மருந்துத் தட்டுப்பாடானது தலைவலி மாத்திரையிலிருந்து அவசர சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வரை வியாபித்திருக்கிறது. இந்த நிலைமையும் இதன் விளைவுகளும் சர்வதேச ஊடகங்களில் காட்டப்படுவதில்லை. இலங்கையிலுள்ள எந்தவொரு அரச மருத்துவமனைக்கு, எந்த வேளையில் சென்று பார்த்தாலும் பிளாஸ்டர்கள், கையுறைகள், சிறுநீர்க் குழாய்கள், மயக்க மருந்துகள் முதல் நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, விஷக்கடிகள், நீர்வெறுப்பு(ரேபிஸ்) போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் வரை இல்லை. ஆய்வுக்கூட இயந்திரங்கள் வேலைசெய்யவும், அறுவை சிகிச்சைகள் செய்யவும் தேவையான பொருட்களோடு மின்சாரமும் இல்லை. அவசரத்துக்கு அவசர ஊர்தி, ஜெனரேட்டர்களை இயக்க டீசல் இல்லை. குடிக்கவோ சுத்திகரிக்கவோ தேவையான தண்ணீர் இல்லை என்பது போன்ற புலம்பல்களைத் தற்போது நீங்கள் கேட்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT