Published : 20 Apr 2022 06:21 AM
Last Updated : 20 Apr 2022 06:21 AM

ப்ரீமியம்
தேவை கலப்பில்லாப் பொதுப் பேச்சுத் தமிழ்

கோ.பாலசுப்ரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர் ‘சமபந்தி போஜனம்’ என்பது இனி ‘சமத்துவ விருந்து’ என அழைக்கப்படும் என்று 13.04.2022 அன்று அறிவித்திருப்பது நல்ல தமிழை விரும்பும் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், எழுத்துத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் வரம்பின்றி ஆங்கிலக் கலப்பு பெருகிவருவது தமிழ் மீது அக்கறை உள்ள அனைவராலும் கவலையோடு பார்க்கப்படுகிறது. அறிஞர்களும் தமிழ் நலம் விரும்பிகளும் பல அரசியல் தலைவர்களும்  தமிழ் மொழிப் பயன்பாடு ஆங்கிலக் கலப்பின்றி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், வலியுறுத்துகிறார்கள்.

பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வு தொல்காப்பியர் காலத்திலேயே ஆழமாக வேர் விட்டிருந்தது. வடமொழிச் சொற்களைத் தமிழ்க் கவிதையில் பயன்படுத்தும்போது, தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்று விதி வகுத்த தொல்காப்பியரின் வழிகாட்டல், தமிழ் இலக்கிய இலக்கண மரபின் நெடுகிலும் பின்பற்றப்பட்டிருப்பதைக்  காண முடியும். பிறமொழித் தொடர்புகளாலும் சமூக, அரசியல் காரணங்களாலும் பல்வேறு காலகட்டங்களில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக சம்ஸ்கிருதத்திலிருந்து, கடன் வாங்கப்பட்டுள்ளன. பிறமொழிச் சொற்கள் கலந்து தமிழ் பேசப்பட்டு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x