Published : 18 Apr 2022 06:20 AM
Last Updated : 18 Apr 2022 06:20 AM

ப்ரீமியம்
இலங்கையின் ஏப்ரல் புரட்சி!

எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையில், கொழும்பு கடற்கரையில் ஏப்ரல் 9-ம் திகதி பொதுமக்கள் ஒன்றுகூடி ஆரம்பித்துள்ள போராட்டம் இப்போது வரை நீண்டுகொண்டேயிருக்கிறது. இப்படியொரு போராட்டம் ஆரம்பிக்கப் போவதை அறிந்துகொண்ட அரசாங்கம், வழமையாக சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கும் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பதிலாக, இந்த வருடம் ஒன்பதாம் திகதியே அனைவருக்கும் ஒரு வாரம் விடுமுறை வழங்குவதாக அறிவித்து, அனைவரையும் ஊர்களுக்குப் போக உத்தரவிட்டிருந்தது.

கொழும்புதான் தலைநகரம் என்பதால், நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொழும்புக்கு வந்து தங்கி, பணிபுரிந்துவருகிறார்கள். அரசின் உத்தரவுக்குப் பிறகு மக்கள் கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் போவதற்குப் பதிலாக, சொந்த ஊர்களிலிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்டு கொழும்புக்கு வந்து, கொழும்பில் இருந்தவர்களோடு சேர்ந்து கடற்கரையில் தங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதை அரசாங்கம் எதிர்பார்க்கவேயில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x