Published : 11 Nov 2025 06:29 AM
Last Updated : 11 Nov 2025 06:29 AM
பிஹார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று (நவம்பர் 11) நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6இல் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், 65.08% வாக்குகள் (முந்தைய நான்கு தேர்தல்களைவிட அதிகம்) பதிவானதைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், இண்டியா கூட்டணியும் தங்களுக்குச் சாதகமான அம்சமாகக் கூறிக்கொண்டிருக்கின்றன. இரண்டும் இல்லை; இந்த முறை மாற்றம் நிகழும் என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பேசிவருகிறார்.
ஆயுதங்களும் வியூகங்களும்: அண்மைக்காலமாக, வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகளை முக்கியப் பிரச்சினையாக முன்னெடுத்திருக்கும் ராகுல் காந்தி, வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் தொடர்ந்து சாடிவருகிறார். பிஹார் முதற்கட்ட வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளில் - ஹரியாணா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT