Last Updated : 02 Nov, 2025 07:49 AM

 

Published : 02 Nov 2025 07:49 AM
Last Updated : 02 Nov 2025 07:49 AM

ப்ரீமியம்
கலை வாசல் | கதை அறியும் கலை

சி.சு. செல்லப்பா, ‘பெண்டிழந்தான்’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். ஜோடி மாடுகளில் ஒன்று நல்ல நடை மாடு; மற்றொன்று தொங்கோட்ட மாடு. நடை மாட்டுக்கு நடை மாடு ஜோடி சேர்ப்பது வழக்கம். அப்படிச் சேர்த்தால் மாடுகளுக்கு அலுப்பு நேராது; அலுங்காமல் குலுங்காமல் வேலையில் அழகுக் கொடுக்கும்.

நடை​மாட்​டுக்​கு, அத்​திக்​கோம்பை திரு​விழா​வில் ராமருக்கு லட்​சுமணன் மாதிரி, கொம்​புதலை ஓர்​சான முகவெட்​டில் காளை கிடைக்​கிறது. பண்​ணை​யார் சிவ​ராம ஐயர் காளை​யைத் தேடி வந்​தது​போல, ஜமீன்​தா​ரும் ஜோடி எடுக்க வரு​கிறார். இவர் காளை அவருக்​கும், அவர் காளை இவருக்​கும் ரொம்​பவே பிடித்​து​விடு​கிறது. யாருக்கு யார் விட்​டுக் கொடுத்​தார், ஏன் விட்​டுக் கொடுத்​தார் என்​பது​தான் கதை. இதில் மாடு பற்​றிய அத்​தனை நுணுக்​கங்​களை​யும், மனிதர்​களின் அத்​தனை எண்ண ஓட்​டங்​களை​யும், வண்டி ஓட்​டும் சாகசக் கைவரிசைகளை​யும், சொற்​களுக்கு அப்​பால் இயக்​கத்​திலேயே அள்ளி அணைத்​துத் தரும் மகத்​தான கலைமேன்மை இந்​தக் கதை​யில் உச்​ச​மாக நிகழ்ந்​திருக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x