Last Updated : 23 Oct, 2025 07:09 AM

 

Published : 23 Oct 2025 07:09 AM
Last Updated : 23 Oct 2025 07:09 AM

ப்ரீமியம்
உள்ளுறுதி தரும் மனநல வழிகாட்டிகள்

ஒருவரின் மனநலம் தனி ஒருவருக்கானது மட்டுமல்ல; அவர் வாழும் குடும்பம், சமூகம், பணியாற்றும் சூழல் அனைத்துக்குமானது. குடும்பமாக வாழவும், சமூகமாக முன்னேறவும், உளம் கனிந்த அன்புடன் ஒன்றித்திருக்கவும் மனநலம் உதவுகிறது. வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் மனநல வழிகாட்டிகள், இத்தகைய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குத் தவிர்க்க இயலாக் காரணிகளாக விளங்குகிறார்கள்.

கல்வி நிறுவனங்​களில் மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை அறிய, கவனக்​குறை​விலிருந்து மீண்டுவர, அந்தந்த வயதுக்​குரிய மாற்றங்​களைப் புரிந்து​கொள்ள, போதை, கோபம், சண்டை, திருட்டு, இணையவழி மிரட்டல் உள்ளிட்ட நடத்தைகளைச் சீரமைக்க, நல்லொழுக்கம் தவறுகிறபோது ஏற்படும் குற்றவுணர்வைக் கையாள, பெற்றோர்​களைப் புரிந்து​கொள்ள மனநல வழிகாட்​டிகள் உதவுகிறார்கள். உடன் படிக்கும் மாணவர்​களின் ஆதிக்கம் நற்பண்​புகளை வளர்க்க உதவுவது​போலத் தவறு செய்வதற்கும் வழிவகுக்​கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x