Published : 24 Sep 2025 06:22 AM
Last Updated : 24 Sep 2025 06:22 AM

ப்ரீமியம்
கூடுதல் கவனம் கோரும் மனநல மருத்துவம் | சொல்... பொருள்... தெளிவு

2025 செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் அவை, மனநலன் தொடர்பாக இரண்டு முக்கியமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ‘இன்றைய உலக மன நலன்’ (World Mental Health Today), ‘மனநல நில வரைபடம் 2024’ (Mental Health Atlas 2024) என்னும் தலைப்புகளில் வெளியாகியுள்ள இந்த அறிக்கைகளில், தனிநபரைப் பாதிக்கக்கூடிய மனநலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

புள்ளி​விவரங்கள்: உலக அளவில் சுமார் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு அதாவது, மொத்த மக்கள்​தொகையில் 13.6% பேருக்கு மனநலப் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்​பட்​டுள்ளது. பாதிக்​கப்​பட்​ட​வர்​களில் ஆண்களை​விடப் பெண்களே அதிகம். ‘பாதிக்​கப்​பட்​டோர்’ பட்டியலில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் 80 வயதைக் கடந்தவர்​கள்வரை இடம்பெற்றிருப்பது கவனிக்​கத்​தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x