Published : 24 Aug 2025 07:44 AM
Last Updated : 24 Aug 2025 07:44 AM

ப்ரீமியம்
நம்பிக்கையின் உருவம் | நாவல் வாசிகள் 21

இந்​திய விவ​சா​யிகளின் கனவு​களில் ஒன்று தனக்​கென ஒரு பசுவை சொந்​த​மாக்​கிக் கொள்​வது. எனது பால்​யத்​தில் நிறைய வீடு​களில் பசு இருப்​ப​தைக் கண்​டிருக்​கிறேன். நாங்​களே இரண்டு பசு மாடு​கள் வைத்​திருந்​தோம். கல்​தரை​யில் பால்​சொட்டி பிசுபிசுப்​புப் படிந்​திருக்​கும். நுரைபொங்​கும் பாலின் மணம். கைக்​குழந்​தைக்​குப் பால் கேட்டு சிறிய கிண்​ணத்​துடன் வந்து நிற்​கும் வண்​டிக்​கார சுப்​பையா மகளின் துலக்​க​மான முகம் நினை​வில் அப்​படியே இருக்​கிறது.

தனக்கென ஒரு பசுவை வாங்க ஆசைப்​பட்ட ஏழை விவ​சாயி ஹோரி​யின் வாழ்க்​கையை விவரிக்​கிறது பிரேம்​சந்த் எழு​திய ‘கோதானம்’ நாவல். இதனைச் சரஸ்​வதி ராம்​நாத் தமிழில் மொழி​யாக்​கம் செய்​துள்​ளார். ஹோரி ராம் இரண்டு ஏக்​கர் நிலத்​தைச் சொந்​த​மாக வைத்​துள்ள சிறிய விவ​சா​யி. அவரது மனைவி தானி​யா.மகன் கோபர். இரண்டு மகள்​கள். அவருக்கு ஒரேயொரு ஆசை இருந்​தது. அது ஒரு பசுவை வாங்க வேண்​டும்என்​பது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x