Published : 13 Aug 2025 06:32 AM
Last Updated : 13 Aug 2025 06:32 AM
‘வரலாறு விடுதலை செய்த’ நாயகன் ஃபிடெல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் இன்று (ஆகஸ்ட் 13) தொடங்குகிறது. உலகின் வல்லமைமிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் மூக்கு நுனியில் இருக்கும் சின்னஞ் சிறு நாடான கூபாவில், சர்வாதிகாரி பாடிஸ்தாவை விரட்டியடித்து, 1959 ஜனவரி 1 அன்று ஆட்சியைப் பிடித்து, அந்நாட்டின் வரலாற்றையே மாற்றி எழுதியவர் மாபெரும் வீரரான ஃபிடெல். தனது சம காலத்திய உலகத் தலைவர்களிலேயே மிகவும் இளமையானவராக, முற்றிலும் மாறுபட்டவராகத் திகழ்ந்தவர்.
சர்வதேசத் தலைவர்: வாழ்நாள் முழுவதும் அமெரிக்க அரசுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அவர் - ஐசனோவர், கென்னடி, ஜான்சன், நிக்சன், ஃபோர்ட், கார்ட்டர், ரீகன், புஷ் சீனியர், கிளிண்டன், புஷ் ஜூனியர் ஆகிய பத்து அமெரிக்க அதிபர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர்; இந்த அதிபர்கள் கூபாவின் மீது தொடுத்த அரசியல் – பொருளாதார நெருக்கடி அஸ்திரங்கள் ஒவ்வொன்றையும் தவிடுபொடி ஆக்கி, கூபாவின் இறையாண்மையை நிலைநாட்டியவர் எனவும் கூறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT