Published : 10 Aug 2025 07:45 AM
Last Updated : 10 Aug 2025 07:45 AM
நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சம் பற்றியது ‘மனோதிடம்’ நாவல். குஜராத்தி எழுத்தாளரும் ஞானபீடம் பரிசு பெற்றவருமான பன்னாலால் படேல் இதனை எழுதி இருக்கிறார். 1947 இல் வெளியான இந்த நாவலை தமிழில் ந.சுப்பிரமணியன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரிந்தவை யாவும் எனது சுய அனுபவத்திலிருந்து வந்தவை. சிலந்தி தனது எச்சிலைக் கொண்டு வலையைப் பின்னுவது போன்று எனது அனுபவங்களைப் படைப்புகளாக எழுதுகிறேன் என்கிறார் பன்னாலால் படேல். அவர் 61 நாவல்கள் மற்றும் 26 சிறுகதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். வடக்கு குஜராத்தின் சபர்கந்தா பகுதியில் கதை நடைபெறுகிறது. டெகாடியா கிராமத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT