Last Updated : 04 Jul, 2025 08:03 AM

 

Published : 04 Jul 2025 08:03 AM
Last Updated : 04 Jul 2025 08:03 AM

ப்ரீமியம்
மாணவர்களும் சாதி அடையாள நீக்கமும் 

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் வருகைப் பதிவேட்டில் சாதிப் பெயர் இருக்கக் கூடாது; ஆசிரியர்கள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ சாதி அடையாளத்தைச் சொல்லி மாணவர்களை அழைக்கக் கூடாது; கைகளில் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கயிறுகளை மாணவர்கள் கட்டக் கூடாது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் கல்வி நிறுவனங்​களின் பெயர்​களில் இருந்த சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர​விட்​டிருந்தது. சமூக ஆர்வலர்​களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி​யிருக்கும் இந்த நடவடிக்கையும் உத்தரவும் பாராட்டுக்​கு உரியவை. அதேநேரம், ‘மாணவர்​களிடம் சாதிய மனோபாவம் மேலோங்கு​வதற்கு இவை போன்ற கண்ணுக்குப் புலப்​படும் அடையாளங்கள் மட்டும்தான் காரணமா?’ என்கிற கேள்வி முக்கிய​மானது. ஏனெனில், சாதி வெறுமனே அடையாளங்​களில் மட்டுமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x