Published : 25 Jun 2025 06:22 AM
Last Updated : 25 Jun 2025 06:22 AM
சமீபத்தில் எனக்கு எழுத்தின் மீது அதீத ஆர்வம் எழுந்துள்ளதை உணர்கிறேன். மனதில் ஒரு வலிமையான எண்ணம் தோன்றும்போது, அதை வார்த்தைகளால் வடிவமைத்து, அதற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்கிற ஆவல் என்னை ஆக்கிரமிக்கிறது. ஏன் இந்த ஆவல்? எழுதுவது ஏன் என்னை இவ்வளவு ஈர்க்கிறது? இது வெறும் பழக்கம் மட்டுமா அல்லது அதற்கு மேலான ஆழமான ஏதோ ஓர் உணர்வா?
உள்ளார்ந்த பயணம்: வாழ்க்கை எப்போதும் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் பதில்களைத் தருகிறது. நான் இந்தக் கேள்வியை மனதில் எழுப்பிய சில நாள்களுக்குப் பிறகு, அலுவலகத்தில் ஒரு பணியிடப் பயிற்சிபெறுபவர் (intern) அலிசன் ஃபாலன் எழுதிய The Power of Writing It Down என்கிற புத்தகத்தை என்னிடம் வழங்கினார். உண்மையில், அந்தத் தருணம் ஒரு மென்மையான அழைப்பாக இருந்தது - அந்தப் புத்தகம் என் உள்ளத்தைத் தட்டி, எழுத்தின் ஆழமான மாயையை உணர வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT