Published : 16 Jun 2025 06:42 AM
Last Updated : 16 Jun 2025 06:42 AM
திரையில் உள்ள பல்-அடுக்குக் காட்சியில், வட்டங்கள் வளையங்களாகத் தெரிந்தவை நியூரான் இணைப்புகளின் புள்ளிகள். ஆனால், அந்த நியூரான்களுக்கு இடையில் - இந்த இடத்தில் செயற்கை நியூரான்களான - ஒளிரும் கோடுகள் தெரிந்தன. அந்தக் கோடுகள் சற்றுக் கூடுதலான தகவல்களையும் தம்மோடு வைத்திருந்தன. செயற்கை நியூரான் அமைப்பைப் பற்றி செய்மெய் தொடர்ந்து விளக்கிக்கொண்டிருந்தது. இயற்கையான மூளையின் செயல்பாடுகளை மிக எளிமையான கணிதச் சூத்திரங்களாக மாற்றும் வித்தையில் நானும் ஆழ்ந்துபோயிருந்தேன்.
“கோடிக்கணக்கான நியூரான்கள் பல கோடிக்கணக்கான இணைப்புகளால் இணைக்கப்பட்டு உள்ளன. ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்கிற கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மனிதர் தன் வாழ்க்கையில் லட்சக்கணக்கான தடவைகள் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT