Published : 11 Apr 2025 06:30 AM
Last Updated : 11 Apr 2025 06:30 AM

ப்ரீமியம்
ஊடகங்கள் நினைத்தால் தற்கொலைகளைத் தடுக்கலாம்! - மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்

மனநல மருத்துவத் துறையில் இந்திய அளவில் அறியப்பட்ட ஆளுமை, மருத்துவர் லட்சுமி விஜயகுமார். 1986இல் இவர் தொடங்கிய ‘சினேகா’ என்கிற அமைப்பு, தற்கொலைத் தடுப்புப் பணிகளில் நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. ஐ.நா. போன்ற உலக அளவிலான அமைப்புகளின் மனநல மேம்பாட்டுப் பணிகளிலும் பங்கேற்றுள்ள இவரது நேர்காணல்:

மனநலச் சிக்கல் குறித்த புரிதல் சமூகத்தில் முன்பைவிட மேம்பட்டுள்ளதா? - மக்​களிடையே மனத்தடை முழுமையாக நீங்க​வில்லை என்றாலும், விழிப்பு​ணர்வு ஏற்பட்​டுள்ளது. மனநல மருத்​துவத்​துக்கு அங்கீ​காரம் கிடைத்​துள்ளது; கரோனா பெருந்​தொற்றுக் காலத்தில் மனநலம் எவ்வளவு முக்கிய​மானது என்பது பரவலாக உணரப்​பட்டது. மனச்சிதைவு (Schizophrenia), இருமுனையக் கோளாறு (Bipolar disorder) போன்ற பிரச்சினைகள் எப்போதுமே இருக்​கின்றன. கடந்த 30 ஆண்டு​களில் மன அழுத்தம், மனப் பதற்றம் (Anxiety) ஆகிய பிரச்சினைகள் அதிகரித்​துள்ளன. மாற்றம் வேகமாக நடக்கிறது. நேற்று கற்றுக்​கொண்டது, இன்றைக்குத் தேவையற்​ற​தாகி​விடு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x