Published : 16 Mar 2025 07:20 AM
Last Updated : 16 Mar 2025 07:20 AM

ப்ரீமியம்
கர்ணன்: நல்லவனா, கெட்டவனா? | தொன்மம் தொட்ட கதைகள் - 28

ராவணன் இந்திரசித்துவைப் பார்த்து, ‘வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் / நின்றுளென் அன்றோ’ என்று கூறுகிறான். ராவணன், ராமனை வெற்றிபெற வில்லையாயினும் ராமன் பெயர் இருக்கும்வரை
ராவணனின் பெயரும் இருக்கும். ராமனைப் பற்றி பேசும்போது ராவணனும் அப்பேச்சில் இடம் பெற்றுவிடுகிறான். அதாவது, ராவணனையும் உள்ளடக்கியதுதான் ராமனின் வரலாறு. ராவணனின் இந்தக் கூற்றைக் கர்ணனுக்குப் பொருத்தி, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் ‘வென்றிலன் என்ற போதும்’ சிறுகதையை எழுதியிருக்கிறார்.

பதினேழாம் நாள் யுத்தம் நடைபெற்றுக் ​கொண்​டிருக்​கிறது. தரு​மனும் கர்​ணனும் போர் புரிந்​து​கொண்​டிருக்​கிறார்​கள். ஒரு கட்​டத்​தில் தரு​மனுக்​குக் கர்​ணனைக் கொல்​லும் வாய்ப்பு கிடைக்​கிறது. ஆனால், சபதத்​தின்​படி அர்​ஜுனன்​தான் கர்​ணனைக் கொல்ல வேண்​டும். தரு​மன் பின்​வாங்​கு​கிறான். இம்​முறை கர்​ணன் தரு​மனைக் கடுமை​யாகத் தாக்​கு​கிறான். கர்​ணனும் தரு​மனைக் கொல்ல முடி​யாது. ‘பாண்​ட​வர்​களில் அர்​ஜுனனைத் தவிர வேறு யாரை​யும் கொல்ல மாட்​டேன்’ என்று குந்​திக்கு வாக்​குக் கொடுத்​திருக்​கிறான் கர்​ணன். ஆனால், இது தருமனுக்​குத் தெரி​யாது. கர்​ண​னால் கடுமை​யாகத் தாக்​கப்​பட்ட தரு​மன், பாசறைக்​குத் திரும்பி விடு​கிறான். அர்​ஜுனன் தரு​மனைத் தேடிப் பாசறைக்கு வரு​கிறான். கர்​ணனைக் கொல்​லாமல் வெறுங்​கை​யுடன் திரும்​பிவந்த அர்​ஜுனனுக்​கும் தரு​மனுக்​கும் இடை​யில் கடுமை​யான வாக்​கு​வாதம் நடை​பெறுகிறது. அர்​ஜுனனின் வில்​லாற்​றலைக் கேலி செய்​கிறான் தரு​மன். ‘பெண் வேட்​டைக்​காரனுக்​குப் போர்​முறை என்ன தெரி​யும்?’ என்​கிறான். ‘கட்​டிய மனை​வியைக் காப்​பாற்ற முடி​யாதவருக்கு மனைவி வேறா?’ என்று பதி​லுரைக்​கிறான் அர்ஜுனன். இரு​வருக்​கும் இடையி​லான சண்​டையைத் தீர்த்து வைக்​கிறான் கண்​ணன். அளவு​கடந்த கோபத்துடன் சென்று கர்​ணனைக் கொல்​கிறான் அர்​ஜுனன். இது கண்​ணனின் போர் உத்​தி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x