Published : 02 Mar 2025 07:24 AM
Last Updated : 02 Mar 2025 07:24 AM

ப்ரீமியம்
யார் இந்த அகலிகை? | தொன்மம் தொட்ட கதைகள் - 26

தொன்மக் கதாபாத்​திரங்​களுள் மிக முக்​கியமான இடம் அகலிகைக்கு உண்டு. காலந்​தோறும் அகலிகை​யின் கதை மீள் வாசிப்புச் செய்​யப்​பட்டுக்​கொண்டே இருக்​கிறது. அகலிகை​யின் கதையை வெள்​ளக்​கால் ப.சுப்​பிரமணிய முதலி​யார் ‘அகலிகை வெண்பா’ என்ற பெயரில் மூன்று காண்​டங்​களாகப் பிரித்து விரிவாக எழுதி​யிருக்​கிறார். அகலிகையை மணந்​து​கொள்ள நடைபெற்ற போட்​டி​யில் இந்திரன் திட்​ட​மிட்டுத் தோற்​கடிக்​கப்​படு​கிறான். அகலிகை மீதுள்ள காமமும் முனிவர்​மேல் கொண்ட கோபமும் இந்திரனின் அறிவை மழுங்கச் செய்​கிறது. அகலிகை​யைப் பாலியல் வன்முறை செய்​கிறான். ‘நீ மனதால் கற்பிழக்க​வில்லை’ என்று கௌதமர் அகலிகையை ஏற்றுக்​கொள்​கிறார். ஆனாலும் அவளது மன அமைதிக்​காகச் சில காலம் கல்லாக இருக்​கட்டும்
என்று முடி​வெடுக்​கிறார். இவ்வாறு காலந்​தோறும் அகலிகை​யின் வரலாற்றின்​மீது புனை​வுத் தன்மைகள் கூடிக்​கொண்டே சென்​றிருப்பதை அவதானிக்க இயல்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x