Last Updated : 27 Feb, 2025 06:37 AM

1  

Published : 27 Feb 2025 06:37 AM
Last Updated : 27 Feb 2025 06:37 AM

ப்ரீமியம்
இந்திய அறிவியலில் பன்மைத்துவம் இருக்கிறதா?

மத்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகம் 2025ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தின மையக் கருத்தாக ‘இந்திய இளைய சமுதாயம் அறிவியல் - புதுமைத் திறன்களில் உலகத் தலைமையேற்கும் அளவுக்கு வளர்ந்த இந்தியாவை மேம்படுத்தல்’ என்கிற இலக்கை அறிவித்துள்ளது. அறிவியலின் வளர்ச்சிக்குப் புதுமைச் சிந்தனை மிகமிக அவசியம். அதை இந்த அறிவிப்பு சரியாகவே வெளிப்படுத்துகிறது.

இன்று மனித குலம் காலநிலை மாற்றம், சுற்றுச்​சூழல் சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சினை​களைச் சந்தித்து​வரு​கிறது. இதற்கான அறிவியல்​பூர்வமான தீர்வு​களைத் தேடிப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து​வரு​கிறார்கள். ஒரு பிரச்சினைக்கான தீர்வை இரண்டு பேர் சேர்ந்து யோசிப்​ப​தைவிட, பத்துப் பேர் சேர்ந்து யோசித்தால் மிக விரைவாகவும் மிகப் புதுமை​யாகவும் தீர்வுகள் கிடைக்​கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x