Published : 18 Feb 2025 06:39 AM
Last Updated : 18 Feb 2025 06:39 AM
அறிவியல் தொழில்நுட்பக் கல்வியிலும் விண்வெளி ஆராய்ச்சித் துறையிலும் தடம் பதித்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஆர்.எம்.வாசகம் (ராமசாமி மாணிக்கவாசகம்) மறைந்துவிட்டார். முதல் தலைமுறை இந்திய அறிவியலாளர்களில் மிக முக்கியமான ஆளுமை இவர்.
சாதனை செய்த பொறியாளர்: ஆர்.எம்.வாசகம் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ராமசாமி மாணிக்கவாசகம், ஈரோட்டில் பிறந்து, கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பொறியியலும், மெட்ராஸ் ஐஐடி-யில் முதுநிலைப் பொறியியலும் படித்தவர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில், அதன் ஆரம்பக் காலத்தில் சேர்ந்த இந்தியப் பொறியாளர்களில் இவரும் ஒருவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT