Last Updated : 16 Feb, 2025 07:05 AM

 

Published : 16 Feb 2025 07:05 AM
Last Updated : 16 Feb 2025 07:05 AM

ப்ரீமியம்
புனைவுப் பாதையில் ஏற்றப்பட்ட சிற்றகல் | நாளை மற்றுமொரு நாளே

ஐம்பது ஆண்டு​களுக்கு முன்பு, ஜி.நாக​ராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல், காலம் கடந்து இன்றும் அழியாச் சுடராக நிலைபெற்றிருக்​கிறது. காலவெளி​யில் இந்நாவல் ஒரு புதிய புனைவுப் பாதைக்கான ஒளியோடு மேலும் மேலும் பிரகாசிக்​கிறது.

‘ஞானரதம்’ மாதாந்​திரச் சிற்றிதழில் 1973 ஜனவரியி​லிருந்து டிசம்பர் வரையான 12 இதழ்​களில் இந்த நாவல் தொடராக வெளிவந்​தது. பின்னர் தனது படைப்புகள் புத்தக வடிவம் பெறு​வதற்​கென்றே அவர் உருவாக்கிய ‘பித்தன் பட்டறை’ பதிப்​பகத்​தின் வெளி​யீடாக 1974இல் நூல் வடிவம் பெற்​றது. இப்புத்​தகத்​தின் இரண்​டாம் பதிப்பை 1983இல் ‘க்ரியா' வெளி​யிட்​டது. அதன் பின்னரே நாவல் பரவலான கவனிப்​புக்கு உள்ளானது. 2010இல் பெங்​கு​வின் பதிப்பக வெளி​யீடாக ‘டுமாரோ ஒன் மோர் டே’ என்கிற தலைப்​பில் ஆங்கிலத்​தில் வெளிவந்​தது. மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா ‘நாள மற்றுமொரு நாள் மாத்​ரம்’ என்கிற தலைப்​பில் மலையாளத்​தில் மொழிபெயர்த்​துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x