Published : 31 Jan 2025 06:37 AM
Last Updated : 31 Jan 2025 06:37 AM

ப்ரீமியம்
100 ஆவது ஏவூர்தியும் இஸ்ரோவின் எதிர்காலமும்!

புத்தாண்டின் முதல் ஏவுதலை, 2025 ஜனவரி 29இல் நிகழ்த்தி ‘என்.வி.எஸ்-02’ (NVS-02) என்கிற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது இஸ்ரோ. இந்த ஏவுதலைத் தனது 100ஆவது முக்கிய ஏவூர்தி செலுத்துதல் எனவும் அடையாளப்படுத்தியுள்ளது. இந்தத் தருணத்தில், இஸ்ரோவின் வரலாற்றையும் வளர்ச்சியையும் சற்றே திரும்பிப் பார்க்கலாம்!

நேருவின் முயற்சி: 1969இல் தும்பா என்னும் மீனவக் கிராமத்​துக்கு அருகே சைக்கிளில் சிறு ரக ஏவூர்தியை ஏந்திச் சென்று விண்ணில் செலுத்தி, அதன் தொடர்ச்​சி​யாகப் பல்வேறு அனுபவங்​களைப் பெற்றுப் படிப்​படியாக இந்த நிலையை இஸ்ரோ எட்டியுள்ளது. ஏவூர்​திகள், செயற்​கைக்​கோள்கள், விண்ணகப்​பொருள்​களுக்குச் செல்லும் விண்கலங்கள், ஏவுதளம் போன்ற கட்டமைப்புகள், விண்வெளித் தொழில்​நுட்​பத்தைப் பயன்படுத்தும் திறன் வளர்த்தல், எரிபொருள் போன்ற புதிய பொருள்​களைத் தயாரிக்கும் தொழில்​நுட்பம், மின்னணுக் கருவி முதல் செயற்கை நுண்ணறிவு எனப் பற்பல தளங்களில் இஸ்ரோ போன்ற விண்வெளி நிறுவனங்கள் ஈடுபடும். இவற்றில் ஏவூர்தி நுட்பம் குறித்துப் பார்ப்​போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x