Last Updated : 20 Jan, 2025 06:19 AM

 

Published : 20 Jan 2025 06:19 AM
Last Updated : 20 Jan 2025 06:19 AM

ப்ரீமியம்
இயற்கை விவசாயத்தின் புதிய அத்தியாயம்! | தந்தேவாடா

சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்துக்கு மாறியது, சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தியானது. சத்தீஸ்கர் மாநிலமும் இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கத் தொடங்கியிருக்கிறது. பஸ்தர் பிராந்தியத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றான தந்தேவாடா மாவட்டத்தில் - இயற்கை வேளாண்மையின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் சுரங்கங்களால் ஏற்பட்ட இயற்கையின் பேர‌ழிவுகளையும், பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நக்சல் பிரச்சினைகளையும் கண்ட தந்தேவாடா இப்போது இயற்கை விவசாய மாவட்டமாக மிளிரத் தொடங்கியிருக்கிறது.

இயற்கையை நோக்கி... சத்தீஸ்​கரின் தெற்குப் பகுதியில் அமைந்​துள்ள தந்தேவாடா மாவட்டம், இயற்கை வளங்கள், கலாச்​சாரம் மற்றும் மரபுகளின் வளமான தன்மையைக் கொண்டுள்ளது. முக்கியமாக, அதன் பழங்குடி வேர்களால் நிலைநிறுத்​தப்​பட்​டுள்ளது. ஏறத்தாழ 2.7 லட்சம் மக்கள்தொகை கொண்ட இம்மாவட்​டத்தில் 73% பேர் மடியா, முரியா, ஹல்பா போன்ற பழங்குடி சமூகங்​களைச் சேர்ந்​தவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x