Published : 22 Dec 2024 08:34 AM
Last Updated : 22 Dec 2024 08:34 AM
சாகித்திய அகாடமி விருது, வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. பாரதி, புதுமைப்பித்தன் உள்ளிட்ட ஆளுமைகள் குறித்த இவரது ஆய்வுகள் அறியப்பட்டவை. ஆங்கிலத்திலும் கட்டுரை நூல்களை எழுதிவருகிறார். ஆய்வின் செறிவுக்காகவும் சுவாரஸ்யமான எழுத்துநடைக்காகவும் மதிக்கப்பட்ட க. கைலாசபதி போல் கல்விப்புல எல்லையைக் கடந்த ரசிகர்கள் சலபதிக்கும் உண்டு. இவர் எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும்-1908’ நூலுக்காகவே இந்த விருது. அது குறித்து மேற்கொண்ட நேர்காணல் இது.
இம்முறை புனைவு அல்லாத படைப்புக்கு விருது வழங்கப்பட்டுள்ளது... தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய ‘பாரதி: காலமும் கருத்தும்’ விருது பெற்ற நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்’ நூலுக்காகப் பெறுகிறேன். நான் இலக்கிய உலகில் அடியெடுத்துவைத்த காலத்தில் ரகுநாதன்மீது பெரிய பிரமிப்பு இருந்தது. அவருடைய பாரதி நூல்களைப் படித்துப் பித்து பிடித்தது போல் திரிந்திருக்கிறேன். வ.உ.சி.யைத் தேடிச்சென்றுதான் ஆராய்ச்சியாளனாக மாறினேன். எனவே வ.உ.சி. பற்றிய நூலுக்காக விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முற்றிலும் எதிர்பாராதது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இளைய தலைமுறை ஆராய்ச்சியாளர்களுக்கு இது உற்சாகத்தைத் தரும் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT