Published : 08 Dec 2024 07:51 AM
Last Updated : 08 Dec 2024 07:51 AM

ப்ரீமியம்
இளமை என்னும் கற்பிதம் | தொன்மம் தொட்ட கதைகள் - 22

எம்.வி.வெங்கட்ராம், சிறுகதை, நாவல் எனத் தொடர்ச்சியாக எழுதியவர். ‘வேள்வித் தீ’, ‘காதுகள்’ போன்ற முக்கியமான படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர். தொன்மங்களை நவீன இலக்கியமாக எழுதியதில் எம்.வி.வெங்கட்ராமுக்கும் முக்கியப் பங்கு உண்டு. குரு நாட்டு மன்னன் யயாதியின் ஒரே மகளான மாதவி குறித்த தொன்மக் கதையை ‘நித்ய கன்னி’ (1975) என்ற நாவலாக எழுதியிருக்கிறார். ஆண்களால் சுரண்டப்பட்ட ஒரு பெண்ணின் கதையாக இந்நாவல் வாசிக்கப்பட்டது. இவர் எழுதிய ‘யௌவனம் தந்த யுவன்’ என்ற சிறுகதையும் மகாபாரதத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டது. தொன்மங்கள்தான் மனித இனத்தின் பொதுக்கூறாக இருக்கின்றன. மனித சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதற்குத் தொன்மங்களே அதிகமும் பயன்படுகின்றன. ‘தொன்மத்தில் நம்பிக்கையிழந்த எந்த நாகரிகமும் அதன் இயற்கையான வளமுடைய படைப்பாற்றலை இழந்துவிடும்’ என்பது நீட்சேவின் கருத்து. எம்.வி.வெங்கட்ராம் தொன்மத்தில் நம்பிக்கை கொண்டவர். தொன்மங்களை நவீன வாசிப்புக்கு உட்படுத்துவதில் தேர்ந்தவர். அவரது ஆக்கங்களே இதற்குச் சான்று.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x